டெக்சாஸில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்! திருட்டுக்காக கொலையா? போலீசார் விசாரணை!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் மாநகரப் பகுதியில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். டல்லாஸ் மாநகரப் பகுதியின் ப்ளேனோ நகரில் வசித்து வந்த 43 வயது சர்மிஸ்தா சென் என்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரை , ஸ்பிரிங் க்ரீக் என்ற சிற்றோடையில் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். காலை 7:15 மணியளவில் ஒரு பெண் ஸ்பிரிங் க்ரீக்கில் விழுந்து கிடக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்துள்ளனர். அங்கு அவர்
 

டெக்சாஸில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்! திருட்டுக்காக கொலையா? போலீசார் விசாரணை!!அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் மாநகரப் பகுதியில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.

டல்லாஸ் மாநகரப் பகுதியின் ப்ளேனோ நகரில் வசித்து வந்த 43 வயது சர்மிஸ்தா சென் என்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரை , ஸ்பிரிங் க்ரீக் என்ற சிற்றோடையில் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

காலை 7:15 மணியளவில் ஒரு பெண் ஸ்பிரிங் க்ரீக்கில் விழுந்து கிடக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்துள்ளனர். அங்கு அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார்.

சர்மிஸ்தா சென் – ஐ கொலை செய்திருக்கக்கூடும் என கருதப்படும் நபர் ஏற்கனவே திருட்டு வழக்கில் போலீசார் கஸ்டடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த கொலை திருட்டுக்கான காரணமாக் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசாரின் விசாரணை முடிவிலே தான் உறுதியான தகவல்கள் தெரியவரும்.

இறந்த சர்ஸ்மிதா சென், யுடி சௌத்வெஸ்டர்ன் பல்கலைக் கழக மெடிக்கல் சென்டரில் புற்றுநோய் ஆராய்ச்சி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். சர்ஸ்மிதா சென்னின் மரணம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், ஒரு வித பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web