அமெரிக்க விடுதலையின் முக்கியமான அந்த 4 நாட்கள் !  #ஜூலை4 #HBDAmerica #Happy4thofJuly

இங்கிலாந்தின் காலனியாக இருந்த 13 அமெரிக்க மாநிலங்கள் ஒன்று கூடி விடுதலையை பிரகடனப்படுத்திய ஜூலை4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திரதின நாளாக கொண்டாடப் பட்டுவருகிறது.அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் 1754 லேயே ஆரம்பமாகி விட்டது. ப்ரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான யுத்தம் ஐரோப்பியாவிலும் இந்தியாவிலும் தொடங்கியது. இங்கிலாந்துக்கு தேவையான பொருட்களும் தளவாடங்களும் அமெரிக்காவிலிருந்து சென்றது. நாங்களும் ஒரு படைப்பிரிவு தொடங்கி இங்கிலாந்துக்கு போரில் உதவுகிறோம் என்று அமெரிக்காவில் குரல்கள் எழுந்தது. ஆனால், அதை சந்தேகப்பார்வையுடன் பார்த்த இங்கிலாந்து அரசர் இரண்டாம்
 

அமெரிக்க விடுதலையின் முக்கியமான அந்த 4 நாட்கள் !  #ஜூலை4 #HBDAmerica #Happy4thofJulyங்கிலாந்தின் காலனியாக இருந்த 13 அமெரிக்க மாநிலங்கள் ஒன்று கூடி விடுதலையை பிரகடனப்படுத்திய ஜூலை4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திரதின நாளாக கொண்டாடப் பட்டுவருகிறது.அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் 1754 லேயே ஆரம்பமாகி விட்டது. ப்ரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான யுத்தம் ஐரோப்பியாவிலும் இந்தியாவிலும் தொடங்கியது. இங்கிலாந்துக்கு தேவையான பொருட்களும் தளவாடங்களும் அமெரிக்காவிலிருந்து சென்றது.

நாங்களும் ஒரு படைப்பிரிவு தொடங்கி இங்கிலாந்துக்கு போரில் உதவுகிறோம் என்று அமெரிக்காவில் குரல்கள் எழுந்தது. ஆனால், அதை சந்தேகப்பார்வையுடன் பார்த்த இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஜார்ஜ் அனுமதி தர மறுத்து விட்டார். 

ஆனாலும் துடிப்புமிக்க இளைஞர்கள் சிலர்  தன்னார்வ ராணுவம் என உருவாக்கி இங்கிலாந்து அரசுக்கு துணையாக போரில்  போராட முன்வந்தனர். ஆனால் அவர்களுடைய சீருடையை கழட்டி எறிந்து அவமானப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம்,  அமெரிக்க காலனிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு ஆங்கிலேயராக தங்கள் உரிமையும் சுயமரியாதையும் பறிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிரான இயக்கம் தொடங்குவதற்கு முதல் புள்ளியாகவும் அமைந்தது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து படையுடன் பல போர்களைக் கடந்து வந்து 1766ம் ஆண்டு 4ம் தேதி தனது சுதந்திரத்தை பிரகனப்படுத்தியது அமெரிக்கா. ஜூலை 1ம் தேதி இதற்கான கூட்டம் தொடங்கியது.   இங்கிலாந்தின் அப்போதைய 13  காலனிகளாக இருந்த  நியூ இங்கிலாந்து, நியூஹாம்ஷையர், மசசூசட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், நியூயார்க், நியூஜெர்ஸி, பென்சில்வேனியா, டெலவர், மேரிலாண்ட்,  வட கரோலைனா, தென் கரோலைனா, ஜார்ஜியா வின் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிலடெல்பியா நகரில் ஒன்று கூடினார்கள்.

இங்கிலாந்திடமிருந்தும், இரண்டாம் ஜார்ஜ் மன்னரிடமிருந்தும் விடுதலையை பிரகடனப்படுத்துவது என முடிவு செய்தார்கள். அன்றிரவே நியூயார்க் துறைமுகத்திற்கு இங்கிலாந்தின் போர்க்கப்பல் வந்து சேர்ந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்க காலனிகளின் படைகளுக்கு பெரும் சவாலாக அது அமைந்தது. 

ஜூலை 2ம் தேதி 12 காலனிகளின் பிரதிநிதிகள் விடுதலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்கள். நியூயார்க்கின் பிரதிநிதி பின்னர் ஜூலை 9ம் தேதி தான் கையெழுத்திட்டார். 

தாமஸ் ஜெஃபர்சன் வரையறுத்த அரசியலமைப்பு சட்டவடிவத்தை, ஜூலை 3ம் தேதி காலனிகளின் பிரதிநிதிகள் சற்று மேம்படுத்தினார்கள்.  மசூசட்ஸ் பிரதிநிதி ஜான் ஆடம்ஸ் (அமெரிக்காவின் இரண்டாவது அதிபர்) தான் முதன் முதலில் அமெரிக்க சுதந்திர தினம் இனி ஆண்டுதோறும் விமரிசையாக ஜூலை 2ம் தேதி கொண்டாடப்படும் என்று மனவிக்கு கடிதம் மூலம் எழுதி, கொண்ட்டாட்டத்திற்கு வித்திட்டவர் ஆவார். 

விளையாட்டுகள், துப்பாக்கி முழக்கம், அலங்கார விளக்குகள், ஊர்வலங்கள் என எப்படியெல்லாம் சுதந்திர தினக் கொண்டாட்டம் இருக்கும் என்று விரிவாகவுகவும் எழுதியிருந்தார் ஆடம்ஸ். 

ஜூலை 4ம் தேதி அரசியலமைப்பு சட்டவடிவத்தில் 86 சின்னச் சின்ன திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரப்பூர்வமாக அமெரிக்க சுதந்திரந்தை பிரகடனப் படுத்தினார்கள். ஜூலை 8ம் தேதி பென்சில்வேனியாவிலும் நியூஜெர்ஸியிலும் சுதந்திர அமெரிக்காவின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. 

நாடுமுழுவதும் ஒருங்கிணைந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் 1977ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி நடந்தது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் வாண வேடிக்கை, ஊர்வலங்கள், கடைவீதி என ஒவ்வொரு ஊரிலும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் ஜூலை 4ம் தேதி இரவு வாணவேடிக்கை நடைபெறுகிறது. 

உலகில் ஒரே நாளில் அதிகாமான வாணவேடிக்கை நடைபெறுவது ஜூலை 4ம் தேதியில் மட்டும் தான். ஒவ்வொரு நகரமும் போட்டிப் போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துகிறார்கள். 

#HappyJuly4th #HBDAmerica #HBDUSA

A1TamilNews.com Special

 
 

From around the web