உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கும் அமேசான்!

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையிலும் விண்வெளியில் தம்மை நிலைநிறுத்துவது குறித்து பெரும் வல்லரசுகள் போட்டி போட்டு வருகின்றன. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் அமெரிக்காவின் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ். இவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மாஸ்குக்கும் இடையே விண்வெளித் துறையில் யார் கை ஓங்கப் போகிறது என்பது குறித்த போட்டி தற்போது நடந்து வருகிறது. இதுவரை இந்த போட்டியில் பெசாஸின் கை ஓங்கியுள்ளது. அமேசான் நிறுவனம்செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அங்கீகாரம் பெற்று
 

உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கும் அமேசான்!

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையிலும் விண்வெளியில் தம்மை நிலைநிறுத்துவது குறித்து பெரும் வல்லரசுகள் போட்டி போட்டு வருகின்றன.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் அமெரிக்காவின் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்.

இவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மாஸ்குக்கும் இடையே விண்வெளித் துறையில் யார் கை ஓங்கப் போகிறது என்பது குறித்த போட்டி தற்போது நடந்து வருகிறது. இதுவரை இந்த போட்டியில் பெசாஸின் கை ஓங்கியுள்ளது.

அமேசான் நிறுவனம்செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அங்கீகாரம் பெற்று 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்தவும், உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கவும் 2019 முதலே அமேசான் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 578 செயற்கைக்கோள்களை அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலமாக வரும் நாட்களில் அனுப்ப அமேசான் திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து பிராட்பேண்ட் சேவையை வழங்கவும் அமேசான் திட்டமிட்டு வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸைப் போலவே அமேசானும் தனது பிராட்பேண்ட் சேவையை வயர்லெஸ் நெட்வொர்க் மூலமாக அதிவேக இணைப்பை குறைந்த விலையில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்த திட்டத்திற்காக எங்கள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராட்பேண்ட் சேவையில் உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்’ என தெரிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.

வரும் 2026க்குள் அமேசான் தனது செயற்கைக்கோள்களில் பாதியை விண்வெளியில் நிலை நிறுத்தியிருக்கும் என்றும் மீதமுள்ளவற்றை 2029க்குள் அமேசான் செலுத்த வேண்டும் என்றும் FCCயின் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைகோளுக்கு அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டம் பெருத்த சவாலாக இருக்கும் என சொல்கின்றனர் டிஜிட்டல் உலகின் விஞ்ஞானிகள். ஒன்வெப் நிறுவனத்தின் வீழ்ச்சியும் அமேசானுக்கு இதில் பலன் கொடுக்கலாம்.

A1TamilNews.com

 

 

From around the web