மது அருந்த மருத்துவர் பரிந்துரை சீட்டு!! கேரள அரசு பரிசீலனை!

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தினசரி மது அருந்துபவர்களில், மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதே போல் மதுவுக்கு அடிமையாகி, விரக்தியில் இருப்போருக்காக இலவச சிகிச்சை வழங்க கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. சமூகப் பிரச்சனைகள் காரணமாக மது ஆலைகள், விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் மேலும் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில்
 

மது அருந்த மருத்துவர் பரிந்துரை சீட்டு!! கேரள அரசு பரிசீலனை!கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தினசரி மது அருந்துபவர்களில், மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதே போல் மதுவுக்கு அடிமையாகி, விரக்தியில் இருப்போருக்காக இலவச சிகிச்சை வழங்க கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. சமூகப் பிரச்சனைகள் காரணமாக மது ஆலைகள், விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஆனால் மேலும் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் ஆன்லைன் மது விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருவதாக ANI செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web