ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்திய அத்வானிக்கு அழைப்பு இல்லை!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நேரத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே அத்வானி மற்றும் முரளி
 
ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்திய அத்வானிக்கு அழைப்பு இல்லை!
அன்று…

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.

நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நேரத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனால், உமாபாரதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரை மேற்கொண்டு, கடைசியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அத்வானி, கல்யாண்சிங், உமா பாரதி ஆகியோர் இருந்தார்கள். ரத யாத்திரையில் பிரதமர் மோடியும் அத்வானியுடன் கலந்து கொண்டார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உமா பாரதிக்கு மட்டும் அழைப்பு விடுத்து அத்வானி புறக்கணிக்கப்பட்டுள்ளது கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web