மன்னிப்பு கேட்ட மதுவந்திக்கு அவர் ஸ்டைலிலேயே பதில் சொன்ன கருப்புச் சட்டைக்காரர்!

8 ஆயிரம் கோடி புகழ், லதா ரஜினிகாந்தின் அக்காள் மகளும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், சென்னை பிரபல தனியார் பள்ளி தாளாளருமான மதுவந்தி, 8 ஆயிரம் கோடி தவறு மன்னித்து விடுங்கள் என்று கூறியிருந்தார். மன்னிப்பு கேட்டவர் கூடுதலாக சில கேள்விகளையும் கேட்டு இருந்தார். அவர் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்த போது இவர் பிறந்திருக்கவில்லை என்பதால், யாரோ சொல்லிக் கொடுத்ததைத் தான் கிளிப்பிள்ளை போல் திரும்பச் சொல்லி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்நிலையில் திராவிட இயக்கச்
 

மன்னிப்பு கேட்ட மதுவந்திக்கு அவர் ஸ்டைலிலேயே பதில் சொன்ன கருப்புச் சட்டைக்காரர்!8 ஆயிரம் கோடி புகழ், லதா ரஜினிகாந்தின் அக்காள் மகளும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், சென்னை பிரபல தனியார் பள்ளி தாளாளருமான மதுவந்தி,  8 ஆயிரம் கோடி தவறு மன்னித்து விடுங்கள் என்று கூறியிருந்தார். மன்னிப்பு கேட்டவர் கூடுதலாக சில  கேள்விகளையும் கேட்டு இருந்தார். அவர் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்த போது இவர் பிறந்திருக்கவில்லை என்பதால், யாரோ சொல்லிக் கொடுத்ததைத் தான் கிளிப்பிள்ளை போல் திரும்பச் சொல்லி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்நிலையில் திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கோபிநாத் குபேந்திரன்,  மதுவந்தி ஸ்டைலிலேயே ஃபேஸ்புக்கில் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.  அதன் விவரம் வருமாறு, 

“டெல்லி தப்லீக் வேதப்பாட சாலையில் தங்கியிருக்கும் 470 ஜிகாதிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்தப்பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

யோவ் என்னது தப்லீக் வேதப்பாட சாலையா?

மன்னிக்கவும்.. மன்னிக்கவும்.. பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்.. திருப்பதி திருமலை வேதப்பாட சாலை மாணவர்கள் 470 பேரில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து மொத்தப்பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

ஏன்ய்யா இப்படி பப்ளிக் கணக்க எல்லாம் தப்லீக் கணக்குல எழுதுறிங்க?

அதான் மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல? ஏன்னா நான் ஒரு ஹிந்து. என் மனசாட்சிக்கு பயந்து நடக்குறேன். அதான் மன்னிப்பு கேட்குறேன். ஆனால் கொரோனால சாவறதுதான் கண்ணுக்கு தெரியுதா.. ரோடு ஆக்ஸிடண்ட்ல ஆயிரக்கணக்கான பேர் சாகுறாங்களே அதெல்லாம் உயிர் கிடையாதான்னு ஓலா ஓட்டிட்டு, அப்புறம் வந்து கொரோனோ பரவுவதை தடுக்க கிருமி சம்ஹார சூக்தம் பாடச்சொன்னாரே ஒருத்தர் அவரு அதற்கு மன்னிப்பு கேட்டாரா? அந்த செய்தி இருக்கா?

தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லைன்னு சொல்லிட்டு அப்புறம் திடிர்ன்னு வந்து தமிழ்நாட்டில் கொரோனோ மின்னல் வேகத்தில் பரவுதுன்னு ஒருத்தர் சொன்னாரே.. அவர் அதுக்கு மன்னிப்பு கேட்டாரா… அந்த மன்னிப்பு கேட்ட வீடியோ இருக்கா?

கரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும்ன்னு ஒருத்தர் போட்ட ட்வீட்டை உண்மை தகவல் அல்ல என்று காரிதுப்பி நீக்கியதே ட்விட்டர். அவர் அதுக்கு மன்னிப்பு கேட்டாரா.. அந்த மன்னிப்பு கேட்ட ட்வீட் இருக்கா?

கொரோனோ பற்றி சோஷியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி மார்ச் 5-ம் தேதியே நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா வெளிநாட்டிலிருந்து வரும் விமானப்பயணிகளை சோதனைக்குட்ப்படுத்த வேண்டும் என்று பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு, திடீரென்று மார்ச் 22 அன்று ஊரடங்கு உத்தரவு போட்டார்களே.. அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டார்களா? அந்த மன்னிப்பு செய்தி இருக்கா?

ஆரம்பத்துல இருந்தே ஒவ்வொரு நாள் கணக்கா சொல்லிட்டு வந்து, ஒரு நாள் டெல்லி மாநாடுக்கு சென்று வந்த 1103 பேரில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லிய சில நாள் கழித்து டெல்லி சென்று வந்தவர்களில் 961 பேருக்கு தொற்று இல்லைன்னு ஒருவர் சொன்னாரே.. அப்படியெனில் டெல்லி சென்றுவந்த 142 பேருக்குதான் உண்மையில் தொற்று இருந்ததா? அப்போ ஏன் இத்தனை நாளா 558 பேர் என்று சொல்லிவந்தார்கள்? இதற்கேதும் வருத்தமோ, மன்னிப்போ கேட்டிருந்தாரா அவர்?

நான் சொன்ன இந்த அத்தனைப்பேரும் எங்கேயாவது அவங்க தவறுக்கு மன்னிப்பு கேட்டுருக்காங்களா? கமலா காமேஷ் மேடமே ஒரு படத்துல சொல்லியிருக்காங்க.. மன்னிப்பு கேட்குறவன் பெரியமனுஷன் என்று. நான் மன்னிப்பு கேட்டுட்டேன்.. நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன். என்னை மக்கள் மன்னிச்சிடுவாங்க.

அதே சமயத்துல கிருபானந்த வாழப்பாடியார் ஒருமுறை சொல்லிருக்கிறார்.. சங்கின்னு ஒருத்தன் இல்லையெனில் இங்கே நிறைப்பேருக்கு கருப்புசட்டை காரர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாது என்று. சோ சங்கிகளுக்கும் நன்றி.. உங்களுக்கும் நன்றி,”

– இப்படி முடிகிறது  கோபிநாத் குபேந்திரனின் மன்னிப்பு கடிதம்.

A1TamilNews.com

From around the web