நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய்.. இளம்பெண்ணுக்கு ஜோசியம் பார்த்த பெண்.. பின்னர் நடந்த பயங்கரம்!

 
Brazil

பிரேசலில் 27 வயது இளம்பெண்ணுக்கு ஜோசியம் பார்த்த பெண் ஒருவர் நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய் என்று கூறிய நிலையில் அந்த பெண் மறுநாளே உயிரிழந்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசல் நாட்டைச் சேர்ந்தவர் பெர்னாண்டா சில்வா வலோஸ் டா குரூஸ் பின்டோ. 27 வயதான இளம்பெண் மாசியோ பகுதியில் உள்ள மால் ஒன்றிக்குச் சென்றுள்ளார். அந்த இடம் ஜோசியம் பார்ப்பவர்கள் அதிகம் காணப்படும் ஒரு இடமாம். நடந்து சென்றுகொண்டிருந்த பின்டோவை அழைத்த வயதான ஜோசியம் பார்க்கும் பெண்மணி ஒருவர், அவருக்கு ஜோசியம் பார்ப்பதாகக் கூறினார்.

இதையடுத்து, பின்டோ அந்த பெண்மணியிடம் தனது கையை நீட்டியுள்ளார். பின்டோவின் கையைப் பார்த்த அந்த பெண்மணி, நீ இன்னும் சில நாட்கள்தான் வாழ்வாய் என்று கூறியிருக்கிறார். பின்டோ புறப்படும்போது, அந்தப் பெண்மணி ஒரு சாக்லேட்டை அவருக்குக் கொடுக்க, அதை வாங்கிய பின்டோ, பசியாக இருந்ததால் அதை சாப்பிட்டிருக்கிறார்.

Palm Reader

சிறிது நேரத்தில், பின்டோவின் கண் பார்வை மங்கி, தலைசுற்றலும் வாந்தியும் ஏற்பட, பின்டோ தன் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த உறவினர் பின்டோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அதற்குள் பின்டோவின் மூக்கில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்டோ, மறுநாள் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த பின்டோவுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள், பின்டோவின் உடலில் நஞ்சு இருந்ததை வெளிப்படுத்தியுள்ளன. பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் இரண்டு நச்சு ரசாயனங்கள் பின்டோவின் உடலில் இருந்தது தெரியவந்துள்ளது.

Dead Body

மேலும், அந்த பெண்மணி கொடுத்த சாக்லேட்டில்தான் அந்த நச்சுப் பொருட்கள் இருந்தனவா என்பதை ஆய்வு முடிவுகளால் உறுதி செய்ய முடியவில்லை. அத்துடன் பின்டோவுக்கு சாக்லேட் கொடுத்த ஜோசியக்காரப் பெண்மணியையும் கண்டுபிடிக்கமுடியாததால், பின்டோவின் மரணத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கமுடியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

From around the web