உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு.. கதறி அழுத உரிமையாளர்
Updated: Sep 17, 2024, 04:07 IST
இங்கிலாந்தில் உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட ரோஸி என்ற பூனை இன்று உயிரிழந்தது.
இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ரோஸி என்ற பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனை 1991-ல் பிறந்துள்ளது. இந்தாண்டு ஜூன் 1-ம் தேதி இந்த பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது.
Rosie, the cat who was considered the oldest in the world, has passed away in Britain at the age of 33. pic.twitter.com/a8eF4Vciyy
— NewsPoint (@HaberNoktam) September 16, 2024
33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.