ஜெர்மனியில் மகளிர் நாள் விழா! சாதனைப் பெண்களுக்குப் பாராட்டு !!

 
Germany

ஜெர்மனியில் தமிழ் வான் அவை என்ற தமிழர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் கௌசி என்ற  கௌரி சிவபாலன் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நடத்தி வருகிறார்.

இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல்களையும் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளும் இதில் இடம் பெறுகிறது. இந்தத் தமிழ் வான் அவை தளத்துக்கு உலகளாவிய ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Gemany

சாதனையாளர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே  வாழ்த்திப் போற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தமிழ் வான் அவை மூலம் அவர்களைக் கௌரவப்படுத்தி, போற்றுதலுக்குரிய தொண்டைச் செய்து வருகின்றார் கௌசி.

அந்த வகையில், கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழ் வான் அவை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் மூன்று சாதனைப் பெண்களுக்கு விருதுகள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.

Germany

முனைவர் மனோன்மணி சண்முகதாஸுக்கு, “பைந்தமிழ் ஒளவை” என்ற விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு “பெண்ணியச் செயல்வாதி” என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்

பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி “செயலற்றுச் செம்மல்“ என்ற விருது பெற்றார்.

Germany

மூன்று சாதனைப் பெண்களுக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவித்ததில் தமிழ் வான் அவை பெருமை கொள்வதாக நிறுவனர் கௌசி தெரிவித்தார்.

விருது பெற்ற சாதனைப் பெண்களின் ஆவணப் படங்களை
https://youtu.be/AHNZfpBdiG8
https://www.youtube.com/watch?v=SJFI3Tot974
https://youtu.be/2sEnCc1Eh9Q
என்ற யூடியூப் இணைப்புகளில் காணலாம்.

- கோவிலூர் செல்வராஜன், இலண்டன்

From around the web