உள்ளாடைக்குள் 5 அரியவகை பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற பெண்.. துறைமுகத்தில் பரபரப சம்பவம்!
சீனாவில் பெண் ஒருவர் தனது உள்ளாடைகளில் பாம்புகளை கடத்தி சென்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் புக்சியான் துறைமுகம் உள்ளது. அங்கிருந்து ஹாங்காங் செல்லும் கப்பலில் பயணிக்க பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்துள்ளார்.
அதன் பேரில் துறைமுக அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த பெண் தனது மேல் உள்ளாடையில் 5 பாம்பு குட்டிகளை துணி பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்ததை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண் தைரியமாக தனது மார்பகங்களுக்கு இடையே பாம்புக்குட்டிகளை மறைத்து கொண்டுவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Pantherophis guttatus என்ற அரிய வகை பாம்புகளை இந்த பெண் கடத்தியுள்ளார். இந்த வகை பாம்புகள் அமெரிக்காவில் தென்படும் உயிரினமாகும். இந்த பெண்ணின் அடையாளத்தை சுங்க அதிகாரிகள் வெளியே தெரிவிக்கவில்லை. அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளின் படங்களை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம், இதே புக்சியான் துறைமுகத்தில் 112 நிண்டெண்டோ ஸ்விட்ச் கேம் கார்டுகளை தனது காலணிகளில் மறைத்து வைத்திருந்த ஒருவர் பிடிபட்டார். ஜனவரி மாதம், ஒரு பெண் விசித்திரமான வழியில் நடப்பதை முகவர்கள் கவனித்ததை அடுத்து, அவரது உள்ளாடையில் 2,415 SD கார்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.