பெப்பர் ஸ்ப்ரே அடித்து ஊபர் டிரைவரை தாக்கிய பெண்.. அமெரிக்காவில் பயங்கரம்.. வைரல் வீடியோ!

 
NYC

அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பயணித்த வாடகை காரின் டிரைவர் கருப்பினத்தவராக இருந்ததால் அவரை பிடிக்காமல் அந்த பெண் பெப்பர் ஸ்ப்ரேவை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கில்பேட் என்ற பெண் ஊபர் வாடகை காரை புக்செய்து, தன் தோழியுடன் பயணம் செய்துள்ளார். அவர்கள் பயணித்த காரானது நியூயார்க் நகரத்தில் உள்ள செக்சிங்டன் பகுதியில் இரவு 11.20 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அந்த சமயம் பின் இருக்கையில் இருந்த கில்பேட் திடீரென்று தனது கைப்பையை திறந்து அதில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து டிரைவரின் முகத்தில் அடித்துள்ளார்.

NYC

இதில் நிலைதடுமாறிய கார் டிரைவர், என்ன...என்ன... என்று காரைவிட்டு இறங்கி உள்ளார். கில்பேட் அருகில் அமர்ந்துக்கொண்டிருந்த அவரது தோழிக்கும் நடந்தது என்ன என்பது புரியாமல், கில்பேட்டை பார்த்து, நீ என்ன செய்கிறாய் புரியவில்லை... என்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஊபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், பயனரின் தாக்குதல் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. வன்முறையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பயனர் எங்கள் பிளாட்பார்மில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறார். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்றார். 


அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பயணித்த வாடகை காரின் டிரைவர் கருப்பினத்தவராக இருந்ததால் அவரை பிடிக்காமல் அந்த பெண் பெப்பர் ஸ்ப்ரேவை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web