புறப்பட்ட சில நிமிடங்களில்.. தீ பிடித்து எரிந்த விமானம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

கனடாவில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீ பிடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ரோறியோ மாகாணத்தின் டொரண்டாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்க்கு 389 பயணிகள், 113 சிப்பந்திகளுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது. டொரோண்டா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்தது.
இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே தரையிறக்குமாறு அறிவுறுத்தினர். சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
Video captures moment Air Canada 777 had a compressor stall on departure from Toronto Pearson International Airport on Wednesday. AC872 returned safely 30 minutes later. pic.twitter.com/I8LrySWHBJ
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 7, 2024
முன்னதாக, விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்தனர். இதனிடையே, விமானம் டேக் ஆப் ஆனதும், அடிப்பகுதியில் தீ பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறன்றன.