அமெரிக்க இந்தியர்களின் குடியுரிமையை பறிச்சிடுவாரா ட்ரம்ப் ? உண்மை என்ன?

 
Donald-trump

அமெரிக்க அதிபராக இரண்டாம் தடவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 தேதி பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர், பதவியேற்ற முதல் நாளே குடியுரியமை சட்டத்தை மாற்றும் ஆணை பிறப்பிப்பேன் என்று கூறியுள்ளார். 

இது குறித்து இந்திய மக்களிடையே பீதியை உருவாக்கும் வகையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடு வருகின்றன. ஆனால்  அதிபர் ட்ரம்ப் அவ்வளவு எளிதில் குடியுரிமைச் சட்டத்தை மாற்றிவிட முடியாது என்பது தான் உண்மையான நிலவரமாகும்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 14 அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமையை வழங்கியுள்ளது. ஒரு வேளை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் ஆணை பிறப்பித்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாரும் அரசியலமைப்பு திருத்தம் 14 க்கு எதிரான தீர்ப்பை வழங்கத் தயாராக இல்லை. இது  அதிபரின்  ஆணைக்கு உட்பட்டதே இல்லை என்பது தான் எதார்த்தமானதாகும். 

இரு அவைகளிலும் ட்ரம்ப் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் திருத்தம் 14 ஐ மாற்றும் புதிய திருத்தத்தைக் கொண்டுவர முடியும். ஆனால் அதுவும் உச்சநீதிமன்றத்தில் தடுக்கப்படும் என்று தான் தெரிகிறது. என்ன தான்  ட்ரம்ப் ஆணையிட்டாலும்  அமலுக்கு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது. 

ஒருவேளை ட்ரம்ப் பின் ஆணை அமலுக்கு வந்தால் கூட , அது அமெரிக்காவில்   இனி மேல் பிறக்கப்போகும் குழந்தைகளுக்குதான் பொருந்தும். தற்போது குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை

அமெரிக்க  தேசிய நலனுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான ஆணை இந்த வகையில் சேராது தானே?           

From around the web