அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்..? பிரபல ஜோதிடர் கணிப்பு

 
Emy trip

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்று பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டார். 

Trump - Biden

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். தற்போது துணை அதிபர் கமலா ஹாரிஸ்( 59), ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார். அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என அவர், கணித்து உள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kamala Harris - Trump

ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ்தான் அதிபர் தேர்தலில் களம் இறங்குவார்  என கடந்த 2020-ம் ஆண்டில் ஜோதிடர் எமி ட்ரிப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web