வந்தது வெள்ளைப் புகை.. முதன் முதலாக அமெரிக்காவிலிருந்து புதிய போப்!!

 
Pope Robert Prevost

போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் ஐ தேர்வு செய்யும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த கார்டினல்கள் வாக்கு செலுத்தினர். முதலில் நடந்த வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிந்தன, கருப்பு புகை வெளியேறியது.

வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு வெள்ளைப் புகை வெளியேறியது.  அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் ரோமின் 267வது பிஷப்பாக (போப்) தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு போப் தேர்வின்போது முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக இருந்தவர் ராபர்ட் ப்ரோவோஸ்ட்.

1059ம் ஆண்டு முதன் முதலாக போப் நிக்கோலஸ் II தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக அமெரிக்காவிலிருந்து போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகும்.

ராபர்ட் ப்ரவோஸ்ட், திருச்சபையின் நவீன சவால்களை எதிர்கொள்ளும் திறனும், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தை ஒருங்கிணைக்கும் தலைமைப் பண்பும் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் ராபர்ட் ப்ரவோஸ்ட் க்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web