என்ன நடக்கிறது தென் கொரியாவில்? அதிபரின் அதிரடி அறிவிப்பு!!
தெற்காசியாவின் முக்கியப் பொருளாதார மண்டலமாக விளங்கும் தென் கொரியா நாட்டில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிபர் யூன் சுக் யியோல் கொண்டுவரும் தீர்மானங்களை எதிர்க்கட்சியினர் முறியடித்து வருகின்றனர்.
அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசு எந்திரம் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களாக இருக்க வேண்டும் ஆனால் அது ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் செயல்படுகிறது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், வட கொரியாவின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் மார்ஷியல் அவசரநிலை சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் யியோல் அறிவித்துள்ளார்.
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் மேற்கு நாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கும் சாம்சங், ஹுண்டாய், கியா நிறுவனங்கள் தென் கொரியா நாட்டிலிருந்து இயங்குகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.