திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண்கள் தற்கொலைப்படை தாக்குதல்.. 18 பேர் பலியான சோகம்!

 
Nigeria

திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

Nigeria

இந்த நிலையில், நைஜீரியாவின் பர்னோ மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி மற்றும் மருத்துவமனையில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

dead-body

இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலை பெண் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

From around the web