சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்.. ஆதரவாளர்களிடையே பேசிய கமலா ஹாரிஸ்!

 
Kamala Harris

சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாற்றி உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் (78) 292 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு பின்பு முதன்முறையாக ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் முன் தோன்றி கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை ஏற்று கொண்டார்.  அவருடைய பேச்சை கேட்க திரண்டிருந்த ஆதரவாளர்கள் பலரும் அப்போது அழுதபடி இருந்தனர்.

Kamala - Trump

குடியரசு கட்சியை சேர்ந்த, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்பிடம் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என அரசு நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறினார். இதனால், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தோல்வியடைந்தபோது, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் மறுப்பு தெரிவித்த விசயங்களை ஹாரிஸ் சுட்டி காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்காக, நம்முடைய நாட்டின் மீது கொண்ட முழுமையான அன்பு மற்றும் முழு உறுதி ஆகியவற்றால் என்னுடைய மனம் முழுவதும் நன்றியால் நிரம்பியிருக்கிறது என்றார். நாம் இருட்டுக்குள் நுழைகிறோம் என்பது போன்று பலர் உணருகின்றனர் என எனக்கு தெரியும். ஆனால், இருட்டாக இருக்கும்போதே, நாம் நட்சத்திரங்களை பார்க்க முடியும் என்று பழமொழி ஒன்றை நினைவு கூர்ந்து பேசினார்.

Kamala Harris

இதற்கு முன், டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட அதிபர் ஜோ பைடன், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். வெள்ளை மாளிகைக்கு வரும்படி அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார். நாட்டுக்கு இன்று உரையாற்றவும் பைடன் திட்டமிட்டு இருக்கிறார்.

From around the web