சீன மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலைக் கழகத்தில் தடை!! இந்திய மாணவர்களுக்கு பிரச்சனையா?

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பின்னணியை குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு அமெரிக்கப் பல்கலைகழகங்களில் இடமளிக்கக் கூடாது என்று அதிபர் ட்ரம்ப்பின் அரசு முடிவு செய்துள்ளது.
இது வரையிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரபலங்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் உயர்கல்வி படித்து வந்தனர். சீன அதிபரின் மகள் கூட அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற்வர் தான். சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வெளியுறவுத் துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புடையவர்களை தடை செய்யும் அமெரிக்கா, இந்திய அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கும் தடை விதித்தால் ஆச்சரியமில்லை.