பல்கலைக்கழக மாணவர் நாடு கடத்தல்! அமெரிக்காவில் சட்டப்பூர்வ குடியேறிகளுக்கும் குறி!!

 
khalil

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது அமெரிக்க அரசு. இந்தியாவுக்கு இது வரையிலும் மூன்று ராணுவ விமானங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தியுள்ளனர். இதே போல் வேறு நாட்டவர்களும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மகமொது கலீல் என்ற பாலஸ்தீனிய மாணவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இவர் அமெரிக்க குடிமகளை திருமணம் செய்து சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்.அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற்று சட்டத்திற்குட்பட்டு வசித்து வந்தாலும், இஸ்ரேலுக்கு எதிரான போரட்டங்களில் பங்கேற்று வருவதால்  திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் அடிப்படை உரிமையான பேச்சுரிமைக்கு எதிரானது என்ற கருத்துகள் எழுந்துள்ளது.

விசா மற்றும் க்ரீன்கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் சமூகத்தள கணக்குகளை குடியுரிமை துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.