கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

 
Germany

ஜெர்மனியில் உள்ள விமான நிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், வானை நோக்கி 2 முறை சுட்டார்.  காரில் இருந்து, எரிந்து கொண்டிருந்த 2 பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.

Germany

இதனால், பயணிகள், அவர்களின் உறவினர்கள் என அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். இதில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Germany

எனினும், இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.  துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்தி கொண்டு செல்கிறார் என தெரிவித்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

From around the web