இங்கிலாந்தில் இரண்டு சிறுவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட தாய்.. 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
இங்கிலாந்தில் மகனின் படுக்கறையில் 2 சிறுவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் மகன் பள்ளிக்கு சென்ற நேரத்தில் அவரது படுக்கையறையில் இரண்டு 13 வயது சிறுவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட 36 வயதுடைய தாய் நடாலி ஹாரிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறுவர்களை அவருடைய வீட்டிற்கு அழைப்பதற்கு முன்பாக, சினாப்சாட் செயலி மூலம் அந்த பள்ளி சிறுவர்களில் ஒருவருக்கு பாலியல் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, நடந்தவற்றை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு சிறுவர்களிடம் நடாலி ஹாரிஸ் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இரண்டு சிறுவர்களில் ஒருவன், நடாலி ஹாரிஸுடன் 3 பேராக இருந்தவற்றை படம் பிடித்து அந்த காணொளியை பள்ளி முழுவதும் பரப்பியதை அடுத்து நடாலி ஹாரிஸ் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் இறுதியில் ஹேண்ட்ஸின் வாட்டர்லூவில் பகுதியை சேர்ந்த நடாலி ஹாரிஸ் 4 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட பிறகு அவரது 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வியாழக்கிழமை தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, நடாலி ஹாரிஸ் கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நீதிமன்ற விசாரணையின் போது சிறுவர்களில் ஒருவரின் தாய், நடாலி ஹாரிஸ் தன்னுடைய மகனின் குழந்தை பருவத்தை திருடி விட்டதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.