சீனாவில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து.. 500 பேர் படுகாயம்.. 102 பேருக்கு எலும்பு முறிவு

 
china

சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில் நேற்று புறப்பட்டது. தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே தண்டவாளத்தில்  மற்றொரு பயணிகள் ரயில் வந்துள்ளது.

அந்த ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. தண்டவாளத்தில் பனி படந்திருந்ததால் பின்னால் வந்த ரயிலில் பிரேக் பிடித்தும் ரெயில் சறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ரயில் மீது மோதியது.   

china

இந்த கோர விபத்தில் 2 ரயிலிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 423 பேர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே சமயம் இந்த விபத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், காற்று சுழற்சிக்காக சிலர் அவசரகால சுத்தியலை எடுத்து ரயிலின் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

From around the web