அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது மோதிக்கொண்ட இரண்டு விமானம்.. 2 விமானிகள் பலி!

 
Nevada

அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது இரண்டு விமானங்கள் மோதிய விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. அப்போது வானில் சாகசம் செய்து காட்டுவதற்காக ஏராளமான விமானங்கள் வானில் வட்டமிட்டன. இதில் டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. 

Nevada

இதனால் மோதிக்கொண்ட இரண்டு விமானங்களும் தரையில் வேகமாக விழுந்து நொருங்கியது. விமானம் தரையில் மோதி நொருங்கியது விமானிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் உயிரிழந்த விமானிகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் கூறுகையில், “மதியம் 2.15 மணியளவில் டி-6 தங்கப் போட்டியின் முடிவில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன” என்று தெரிவித்தார். 

மேலும் விசாரணை நடந்து வருவதாக குறிபிட்ட அவர்கள், கூடுதலான தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web