மாயமான 2 இந்திய வம்சாவளிக் குழந்தைகள்.. சடலமாக மீட்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

 
NYC

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 குழந்தைகள் காணமல் போன நிலையில், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய மாணவிகள் இருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த சனிக்கழமை காணாமல் போயுள்ளார்கள்.

Lake

இதையடுத்து, சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த போலீசாருடன், அக்கம் பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் துவங்கியுள்ளார்கள். சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் கிடப்பது தெரியவரவே, ஓடோடிச் சென்ற பெல்லா பல்டி (14) என்னும் சிறுமி, பிள்ளைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கொடுக்க முயன்றுள்ளாள்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, இரண்டு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

USA

இன்னொரு துயரம் என்னவென்றால், குழந்தைகளின் தாய் சுதாவும், குழந்தைகளின் பாட்டியும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் தந்தையான டேவிட் அந்த நேரத்தில் இந்தியா சென்று இருந்திருக்கிறார். குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் இழந்து, அவர்களுடைய பெற்றோர் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

From around the web