கார் விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலி.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

 
Arizona

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தின் ஹுசுராபாத் நகரை சேர்ந்தவர் முக்கா நிவேஷ் (19). ஜங்காவன் மாவட்டத்தின் ஸ்டேசன் கான்பூர் நகரை சேர்ந்தவர் கௌதம் பார்சி. அவர்கள் இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர்.  

dead-body

இந்த நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு கார் ஒன்று அவர்களுடைய கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த மோதலில், இந்திய மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரிசோனா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை கைப்பற்றினர்.

இதன்பின்னர், அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில், இவர்கள் சென்ற கார் மீது மோதிய வாகனத்தின் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

Arizona

ஏப்ரல் 20-ம் தேதி இந்த கொடிய விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். அவர்களின் மறைவுக்கு அரிசோனா போலீசார் இரங்கல் வெளியிட்டனர்.

From around the web