அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து பலி.. ஸ்காட்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Scotland

ஸ்காட்லாந்தில் இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

dead-body

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் கருத்தூரி (26) மற்றும் சான்ஹாக்யா பொலிசெட்டி (22) என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவர்கள் மறைவு குறித்த் தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக்கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scotland

லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஆந்திராவை சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் புதன்கிழமை மாலை நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்கள் சிறிது கீழே கண்டெடுக்கப்பட்டன. இந்திய துணைத் தூதரகம் இருவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தூதரக அதிகாரி ஒருவரின் உறவினரை சந்தித்தார், டன்டி பல்கலைக்கழகத்தில் வசிக்கும் அனைத்து உதவிகளும் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் என்றும் அதன் பிறகு உடல்களை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.

From around the web