துருக்கி - சிரியா நிலநடுக்கம்.. 3 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசய மனிதன்!!

 
Syria

சிரியாவில் நிலநடுக்கம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு மனிதர் ஒருவரை மீட்பு படையினர் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. 

Turkey

இரு நாடுகளிலும் மொத்தமாக 59,259 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கியில் 50 ஆயிரத்து 783 பேரும், சிரியாவில் 8 ஆயிரத்து 476 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மனிதர் ஒருவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். உடல் மிகவும் மெலிந்த நிலையில் உயிருடன் இருந்த அந்த மனிதரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதித்தனர்.


நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி அந்த நபர் எவ்வாறு மூன்று மாதங்கள் வரை உயிர் பிழைத்தார் என்ற அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நபர் தற்போது சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

From around the web