தொண்டையில் சிக்கிய வான்கோழி இறைச்சி.. எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய சோகம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

 
Spain

ஸ்பெயினில் பெண் ஒருவருக்கு சாப்பிடும்போது இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கியதையடுத்து அதை எடுக்க பயன்படுத்திய டூத் பிரஷை தொண்டையில் சிக்கிய சம்வம் நிகழ்ந்துள்ளது.

ஸ்பெயினின் கால்டாகாவோ பகுதியைச் சேர்ந்த இளம் பெணு ஹீசியா. இவர், நவம்பர் 29-ம் தேதி வான்கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது இறைச்சியின் சிறு துண்டு அவரது தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது. மூச்சுவிட சிரமப்பட்ட ஹீசியா, உதவிக்கு யாரும் இல்லாததால் தன்னிடமிருந்த டூத் பிரஷை பயன்படுத்தி அந்த இறைச்சி துண்டை வெளியே எடுக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக கையிலிருந்த டூத் பிரஷ் நழுவி அவரது தொண்டைக் குழிக்குள் சென்றது.

என்னுடைய தந்தையால் எனக்கு உதவ முடியாது. ஏனென்றால் அவரது குதிகால் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீல் சேரிலிருந்து அவரால் எழுந்திருக்க முடியாது. அதனால் நாமே எடுத்துவிடலாம் என நினைத்து டூத் பிரஷை பயன்படுத்தினேன். உணவு மாட்டிக் கொண்டதும் என்னால் மூச்சுவிட முடியவில்லை. பக்கத்தில் டூத் பிரஷ் தான் இருந்தது. இறைச்சி துண்டுகள் மெல்ல நழுவி தொண்டைக்குள் விழும் போது எதிர்பாராவிதமாக, நான் வைத்திருந்த பிரஷையும் விழுங்கிவிட்டேன். பிரஷை பிடிக்க நானும் எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் தொண்டையில் வழுக்கிக் கொண்டு உள்ளே மாட்டிக்கொண்டது என அப்பாவியாக கூறுகிறார் ஹீசியா.

Turkish

பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததும் அவரே மருத்துவமணைக்குச் சென்றுள்ளார். நல்ல வேளையாக இந்த அதிர்ச்சியான சம்பவத்தின் போது அவருக்கு எந்த வலியும் ஏற்படவில்லை. தனக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலைமையை மருத்துவமனை பணியாளர்களிடம் விளக்கமாக கூறியபோது அவர்கள் அனைவருமே வினோதமாக பார்த்துள்ளனர்.

அனைவருமே என்னைச் சுற்றி நின்று கொண்டனர். நான் சொல்வதை அவர்கள் முழுமையாக நம்பவில்லை. ஒருவழியாக எக்ஸ்ரே எடுத்த பிறகு தான் அவர்கள் நம்பினர். இவ்வளவு களேபரத்திலும் அந்த டூத் பிரஷும் அதே இடத்தில் சிக்கிக் கொண்டிருந்தது எக்ஸ்ரேயில் தெளிவாக தெரிந்தது என்கிறார் ஹீசியா.

Operation

மூன்று மணி நேரமாக அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர், கடைசியாக 40 நிமிட சிகிச்சையில் வெற்றிகரமாக அவரது தொண்டைக் குழியிலிருந்து டூத் பிரஷை வெளியே எடுத்தனர். நல்லவேளையாக டூத் பிரஷை உணவுக்குழாய் வழியாகவே எடுத்துவிட்டனர். இதனால் அறுவைச் சிகிச்சையும் தேவையில்லாமல் போய்விட்டது.

From around the web