சான் அண்டோனியாவில் ட்ரம்ப் அனுப்பிய விமானம் பஞ்சாபில் தரையிறக்கம்!

 
immigrants

அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களில் 205 பேரை ஏற்றிக்கொண்ட அமெரிக்கப் போர்விமானம் டெக்சாஸ் மாநிலம் சா அண்டோனியா நகரிலிருந்து பிப்ரவரி 4ம் தேதி புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு வந்து சேர உள்ளது.

அமெரிக்காவில் விசாவுக்கான கால அவகாசத்தைக் கடந்து தங்கியிருப்பவர்கள், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என 18 ஆயிரம் பேர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இப்படி சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

18 ஆயிரம் பேர்களில் முதல் கட்டமாக 205 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுபவர்கள் இந்திய அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் சட்டத்தை மீறி குடியேறியிருக்கும் இந்தியர்களை திருப்பிப் பெற்றுக்கொள்ள இந்தியா திறந்த மனதுடன் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

From around the web