டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முயற்சி செய்த டிரம்ப்.. டிக் டாக்கில் என்டரி.. ஒரேநாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

 
Donald-trump

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

tik-tok

இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார்.

அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் அதிபராக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

Trump

இந்த நிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

From around the web