அதிபரே ஆனாலும் டிரம்புக்கு சிறை.. 2,937 கோடி ரூபாய் அபராதம்.. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

 
Donald Trump

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். உடன், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்  ஆகியோர்களும் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில வருடங்களாக டிரம்ப் நிறுவனம் மூலம் சம்பாதித்த வருமானத்திற்கு உரிய கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யாமல் இருந்துள்ளார் என அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முழுதாக முடிந்து தீர்ப்பு வெளியானது.

Justice Arthur

நீதிபதி ஆர்தர் எங்கோரோன் கூறிய தீர்ப்பில், சொத்துகுவிப்பு வழக்கில், டொனால்ட் டிரம்ப் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,937 கோடி ருபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும், டிரம்ப் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தார்.

இதனால் அமெரிக்காவின் முதன்மையான பல வங்கிகளில் இருந்து அவர் பணம் பெற முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ட்ரம்ப் தரப்பு உறுதி அளித்துள்ளது.

Jr Donald

மேலும், அவரது மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்) அபராதம் செலுத்துமாறும், அவர்கள் இரண்டு ஆண்டுகளாக தலைமை பொறுப்புகளில் பணியாற்ற தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் இந்த வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

டொனால்ட் டிரம்ப் இந்த குற்றசாட்டை முழுதாக மறுத்துள்ளார். டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் , தாங்கள் மேல்முறையீடு செல்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , இது என் மீதான பொய்யாக கூறிய வழக்கு என்றும் இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web