பதவியேற்றார் ட்ரம்ப்! அமெரிக்காவின் 47வது அதிபர்!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். வாஷிங்டன் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டொனால்ட் ட்ரம்ப் -க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடன் 46 வது அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டனர்.
முன்னதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் மனைவி உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிரபெல் இருந்தனர்.
முன்னாள் அதிபர்கள் பில் க்ளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா இந்த விழாவில் பங்கேற்றனர். பில் க்ளிண்டன் மனைவி ஹிலரி க்ளிண்டனுடனும், ஜார்ஜ் புஷ் மனைவி லாரா புஷ்ஷுடனும் பங்கேற்றார். பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா விழாவில் பங்கேற்கவில்லை. முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ம் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட டெக்னாலஜி கம்பெனிகளின் நிறுவனர்கள், தலைமை அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்