சோகம்! வங்கதேசத்தில் சொகுசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 19 பேர் பலி!

 
Bangladesh

வங்கதேசத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் ஷிப்சர் மாவட்டதில் 42 பேருடன் சொகுசு பேருந்து இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. மதாரிபூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விரைவு சாலையில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, விரைவு சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு வேலியில் மோதி, அப்பகுதியில் உள்ள அழமான பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

Accident

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மற்றும் தீயணைப்பு படையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெரும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்க கூடும் என தீயணைப்புத்துறை அதிகாரி ஷில்பு அகமது தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் நிறைவடைந்ததும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.


மோசமான சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக வங்தேசம் பார்க்கப்படுகிறது. அங்குள்ள சாலைகள் மற்றும் பொது வாகனங்களின் ஓட்டுநர்கள் உரிய தரம் கொண்டவர்களாக இல்லை என புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளது.

From around the web