3 நாட்களில் 3 கொலைகள்.. பெண் சீரியல் கில்லர் கைது.. கனடாவில் பரபரப்பு!

 
Canada

கனடாவில் பெண் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் 3 நாட்களில் மூன்று கொலைகள் செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதாகும் அப்பெண்ணின் பெயர் சப்ரினா கே என போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, டொராண்டோ, நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரத்தில் இந்த கொலைகள் நடந்துள்ளன.

Canada

முதல் கொலையில், 60 வயது பெண் சப்ரினாவிற்கு தெரிந்தவராக இருக்கின்றார். இவரது உடல் டொராண்டோவின் வீட்டில் காணப்பட்டது, இதில் கண்கூடாக காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மற்ற இரண்டு கொலைகள் முற்றிலும் தொடர்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நயாகரா நீர்வீழ்ச்சியில், 47 வயதான லான்ஸ் கனிங்காம் என்பவரின் உடல் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவருக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டது.

Murder

மூன்றாவது கொலை ஹாமில்டனில் 77 வயதான ஆசிரியர் மாரியோ பிலிச் மீது சப்ரினா சரமாரியாக குத்தி தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மூன்று கொலைகளுக்கும் சப்ரினாவிற்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web