பாக்ஸ் என்று நினைத்து.. மனிதனையே தள்ளி விட்டு கொன்ற ரோபோ.. தென் கொரியாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Robot

தென் கொரியாவில் காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை எந்திரத்துக்குள் ரோபோ அனுப்பியதால் நிகழ்ந்த மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நடக்கும் கோளாறுகள் காரணமாக அது மனித உயிர்களையே பறித்துவிடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம்தான் தென் கொரியாவில் நடந்திருக்கிறது. நேற்று தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள விளைபொருள்கள் விநியோக மையத்தில் 40 வயதுடைய நபர் பணியாற்றி வந்தார்.

Robots

இந்த தொழிற்சாலை மையத்தில், காய்கறி பெட்டிகளை எடுத்து சீல் செய்ய அனுப்பும் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள ரோபோ ஒன்று காய்கறி பெட்டிக்கும், மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளது.

பின்பு, அங்கு பொருள்களை சரிபார்த்துக் கொண்டிருந்த ரோபோடிக் ஊழியரை காய்கறி பெட்டி என நினைத்து மரப்பெட்டிகளுக்கு இறுக்கமாக சீல் வைக்கும் மெஷினில் திணித்துள்ளது. அப்போது, ரோபோவின் இறுக்கமான பிடிகளுக்கு மத்தியில் அந்த நபர் தப்பிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால், ஊழியரின் தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

dead-body

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரோபோவின் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

From around the web