8 மாதங்களில் 2 முறை என்னை கொல்ல முயற்சி.. எலான் மஸ்க் பகீர் தகவல்

 
Elon Musk

கடந்த 8 மாதங்களில் தன்னை 2 முறை கொல்ல முயன்றதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்,

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், AI மனிதனின் மூளையை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2 முயற்சிகள் நடந்து, 2 பேர் துப்பாக்கிகளுடன் கைதானதாக டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Trump

எலோன் மஸ்க்கின் பதிவிற்கு எக்ஸ் பயனர் ஒருவர் பதிலளித்துள்ளார். அதில், “தயவுசெய்து.. தயவுசெய்து.. உங்கள் பாதுகாப்பை மும்மடங்காக அதிகரிக்கவும்., டிரம்ப்பிற்காக வந்தவர்கள் உங்களுக்காகவும் வருவார்கள்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த மஸ்க், “ஆபத்தான சூழ்நிலைகள் நம்மை எதிர்கொண்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களில் இரண்டு பேர் (தனியான சந்தர்ப்பங்களில்) என்னைகே கொல்ல முயன்றனர். டெக்சாஸில் உள்ள டெஸ்லாவின் தலைமையகத்திற்கு செல்லும் வழியில் துப்பாக்கிகளை காட்டி மிரட்டினர்..,” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக இன்று காலை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டொனால்டு டிரம்ப் உயிருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர் தற்போது நலமுடன் உள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து எலான் மஸ்க் இந்த பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

From around the web