மருத்துவ செலவுக்கு பணம் இல்லை.. பிறந்து 15 நாட்களேயான குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த தந்தை!

 
Pakistan

பாகிஸ்தானில் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வசித்து வருபவர் தய்யாப். இவரது மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தய்யாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. 

Baby

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தய்யாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan

இதனிடையே, லாகூர் பகுதியில் தம்பதி ஒன்று தங்களின் குடியிருப்பில் வேலை பார்த்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹஸாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி தொடர்பில் நடவடிக்கை தொடரும் என்றே கூறப்படுகிறது.

From around the web