அமெரிக்காவில் பரவும் ‘ஜாம்பி’ வைரஸ்.. மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்க விஞ்ஞானிகள் அலெர்ட்!

 
zombie-deer-disease

அமெரிக்கா முழுவதும் உள்ள வனவிலங்குகளிடையே பரவி வரும் நாள்பட்ட வேஸ்டிங் நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ‘ஜாம்பி மான் நோய்’ என்றும் அழைக்கப்படும் இந்த நோய் நவம்பர் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. வயோமிங்கில் உள்ள காட்டுமான் மற்றும் மூஸின் 800 மாதிரிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகள் சோர்வாகவும், மந்தநிலையிலும் இருப்பதே இந்த நோயின் அறிகுறி ஆகும். மேலும் அதன் வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும்.

zombie-deer-disease

இந்த நோயை மெதுவாக வரும் ஒரு பேரழிவு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதுவரை 31 மாகாணங்களில் இந்த நோய் பரவியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதே போன்று ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு மான் நோய் மனிதர்களிடையே பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதே போன்று இந்த மான் ‘ஜாம்பி நோய்’ நடக்காவிட்டாலும், சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த நோயை ஒழிக்க எந்த வழியும் இல்லை என்றும், இதுவரை இந்த நோய் மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

zombie-deer-disease

இந்த நோய் நேரடியாக விலங்குகள் மூலம் பரவுவது இல்லை. மறைமுகமாக விலங்குகளின் மலம், மண் அல்லது செடிகள் போன்ற இடங்களில் தொற்றி இருக்கும் துகள்கள் மூலமும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் ஏற்பட்ட மனிதன் உடல் மெலிந்து நாள்பட்ட நோயால் அவதியுற்று இறுதியில் உயிரிழந்துவிடுவார் என எச்சரிக்கின்றனர்.

From around the web