பூங்காவில் படுத்திருந்த இளம் தாய்.. புல் வெட்டும் இயந்திரம் ஏறிச் சென்றதில் பலி.. அமெரிக்காவில் சோகம்!

 
christine-chavez

அமெரிக்காவில் பூங்காவில் படுத்திருந்த 27 வயது பெண் மீது புல் வெட்டும் இயந்திரம் ஏறிச் சென்றதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மொடெஸ்டோ பகுதியில் உள்ள பியர்ட் புரூக் பூங்காவில் களைச்செடிகள் மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து இருந்த இடத்தில் கிறிஸ்டின் சாவேஸ் (27) என்ற பெண் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பூங்கா நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு இருந்த தொழிலாளி ஒருவர், புற்களை வெட்டுவதற்காக புல் வெட்டும் கருவியை டிராக்டருடன் இணைத்து அப்பகுதியில் வேலையை தொடங்கியுள்ளார்.

christine-chavez

இதையடுத்து உடனடியாக ஒப்பந்த நிறுவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தொழிலாளி காலோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட  கிறிஸ்டின் சாவேஸ் உறவினர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தனர்.

கிறிஸ்டின் சாவேஸின் தந்தை கிறிஸ்டோபர் சாவேஸ், சம்பவ இடத்தில் சில உடல் பாகங்கள் சிதறி கிடப்பதையும், கிறிஸ்டினின் ஆடைகள் கிடப்பதையும் மட்டுமே பார்த்ததாகவும், இது மிகவும் கொடூரமாக இருந்தது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிறிஸ்டின் சாவேஸ் வீடற்ற நிலையில் இருந்து வந்ததுடன், அவரது குடும்பத்தினரால் அவருடைய 9 வயது குழந்தை பாராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

christine-chavez

புற்கள் உயரமாக வளர்ந்து இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று பூங்கா நிர்வாகமும், ஒப்பந்த நிர்வாகமும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கு தொழிலாளி காலோ பொறுப்பாக மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் போலீசாரின் விசாரணைக்கு தொழிலாளி காலோவும், ஒப்பந்த நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது.