இளம்பெண்ணை உயிரோடு புதைத்த இளைஞர்.. காதலிக்க மறுத்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

 
Jasmine Gaur

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் கவுர் (21). இந்திய வம்சாவளி பெண்ணான இவர், நர்ஸிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும், தாரிக்ஜோத் சிங் என்பவருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.

crime

ஒரு கட்டத்தில் தாரிக்ஜோத் சிங்கை ஜாஸ்மீன் தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார். இருப்பினும், ஜாஸ்மின் மீது வெறியாக இருந்த தாரிக்ஜோத் சிங், தன்னை வேண்டாம் என ஒதுக்கும் ஜாஸ்மினை பழிவாங்க கடந்த 2021-ம் ஆண்டு காரில் கடத்திக் கொண்டு சென்று உள்ளார். அப்போது 4 மணிநேரமாக காருக்குள்ளே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங், முடிவில் கேபிள் வயர்களால் ஜாஸ்மினை கட்டிப்போட்டு, அவரை குழி ஒன்றில் இறக்கி உயிருடன் புதைத்த விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாரிக்ஜோத் சிங் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

judgement

இந்த விவகாரத்தில் குற்றவாளி தாரிக்ஜோத் சிங்கிற்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உயிரிழந்த ஜாஸ்மின் கவுரின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தாரிக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

From around the web