பகீர் வீடியோ.. சோஃபாவில் கிடந்த துப்பாக்கி.. எடுத்து விளையாடிய 3 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பயங்கரம்!
அமெரிக்காவில், வீட்டின் சோஃபாவில் கிடந்த துப்பாக்கி ஒன்றை எடுத்த சிறுமி தன்னைத் தானே சுட்டுக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில், சோஃபா ஒன்றில் இருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்ட செரினிட்டி (3) என்ற சிறுமி, ஆர்வ மிகுதியால் அதை எடுத்து பார்த்துள்ளார். அதை அவள் ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே, எதிர்பாரத விதமாக அந்த துப்பாக்கி திடீரென வெடித்தது.
இதில், அந்தச் சிறுமிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவள் தன் விரலை இழக்கலாம் என அஞ்சப்படுவதாக சிறுமியின் பாட்டியான ராபின் புல்லர் என்பவர் தெரிவித்துள்ளார்.
அவள் அந்த துப்பாக்கியை எடுக்கும்போது, அந்த துப்பாக்கியை அங்கு வைத்திருந்த அவளது உறவினரான ஆர்லாண்டோ யங் (23) என்பவர், பிள்ளையை கவனிக்காமல், டிவியில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
துப்பாக்கியை அஜாக்கிரதையாக சோஃபாவில் விட்டிருந்த ஆர்லாண்டோவை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை கவனித்துக்கொள்ளத் தவறியதால் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.