பகீர் வீடியோ.. பல்கலைகழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி.. செக் குடியரசு நாட்டில் பயங்கரம்!
செக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பிரேக் அருகே உள்ள பலாச் சதுக்கத்தில் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று மர்ம நபர் ஒருவர் நவீன துப்பாக்கியுடன் வந்தார். திடீரென அந்த பள்ளியில் நுழைந்த அவர் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஏராளமானோர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைகளில் அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். அவரை போலீசார் சுட்டுக்கொன்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இதைப்போல உயிரிழந்தவர்கள் மாணவர்களா? அல்லது பொதுமக்களா? என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
New video shows gunman shooting at people from a rooftop at Charles University’s Department of Philosphy in Prague, Czech Republic. Over 15 killed and 20 injured in the mass shooting. 10 critically injured. Shooter also killed his own father.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 21, 2023
https://t.co/mZetnJwiZA
இதனிடையே பிரேக் துப்பாக்கிச் சூட்டுக்கு சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த மாணவன் டேவிட் கோசாக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பில் அவரது தந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த மரணத்திற்கு காரணம் அவரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.