தாறுமாறாக ஓடிய டிரக்.. பல வாகனங்களில் மோதி விபத்து.. 51 பேர் பலியான சோகம்!!

 
Kenya

கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து பல வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் நேற்று முன்தினம் இரவு கெரிச்சோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, லண்டியானி சந்திப்பு பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் பேருந்துகள், பயணிகள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 51 பேர் பலியான நிலையில், 32 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Kenya

இது குறித்து ஊடகத்திடம் பேசிய போலீஸ் கமாண்டர் ஜெஃப்ரி மாயெக், “இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர் என்பதை உறுதியாகக் கூற முடியும். அதோடு 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார்.

மேலும் இது குறித்து கெரிச்சோ கவுண்டி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் காலின்ஸ் கிப்கோச், இதுவரை 45-க்கும் மேற்பட்ட உடல்கள் பெறப்பட்டிருப்பதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Kenya

கென்யாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், தற்போது இப்படியொரு கோரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

From around the web