சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்.. இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 76 வயது மூதாட்டி.. ஈக்வடாரில் அதிர்ச்சி!!

 
Ecuador

ஈகவடாரில் உயிரிழந்ததாக கருதி சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, உயிருடன் எழுந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்கா நாடான ஈகவடாரின் பாபாஹோயோ என்ற கடற்கரை நகரை சேர்ந்தவர் பெல்லா மோன்டோயா. 76 வயது மூதாட்டியான அவர், உடல்நலக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

Ecuador

அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 2 நாட்கள் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர்களின் வழக்கப்படி சவப்பெட்டிக்குள் மூதாட்டி அடைக்கப்பட்டார். 

ஆனால், இறுதி சடங்கின் போது யாருமே எதிர்பாராத வகையில், சவப்பெட்டியை உள்ளிருந்து தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி மற்றும் அச்சத்துடன் சவப்பெட்டியை திறந்து பார்த்ததில் மூதாட்டி உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து உடனடியாக மூதாட்டி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு உயிர் காக்கும் கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சவப்பெட்டி வரை சென்று மூதாட்டி உயிர் பிழைத்தது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

From around the web