பால், பாலாடைக்கட்டி விலை திடீர் குறைவு.. அரசு விளக்கம்!

 
Milk

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் பால், பாலாடைக்கட்டி மற்றும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பணவீக்கத்தை பொறுத்தே எரிபொருட்களின் விலை, தங்கத்தின் விலை ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 6.7 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இந்த, பணவீக்க உயர்வின் காரணத்தினால் பெட்ரோலின் விலையை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. 

Petrol

அதன்படி, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.1 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு, நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பால், பாலாடைக்கட்டி மற்றும் முட்டை விலைகள் அனைத்தும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. 

Milk

மேலும், இனி வரும் மாதங்களில் பணவீக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்கிற முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது மற்றும் உக்ரைனில் நடந்த போர் தான் தற்போது நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்ததன் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web