சாலையில் விமானம் விழுந்து தீப்பிடித்து விபத்து... 5 பேர் உடல் கருகி பலி!! அமெரிக்காவில் பரபரப்பு

 
Little Rocks

அமெரிக்காவில் நெடுஞ்சாலையின் நடுவே சிறிய ரக விமானம் கீழே விழுந்து தீபிடித்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உலோக உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து அந்த பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

LIttle rocks

இந்த நிலையில் உலோக ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக அர்கானாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் சிறிய ரக விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டனர். 

லிட்டில் ராக் நகரில் உள்ள பில் அண்ட் ஹலாரி கிளின்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையின் நடுவே விமானம் விழுந்தது. 


இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web