பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்தினருக்கு சமைத்துக் கொடுத்த நபர்... அமெரிக்காவில் கொடூரம்!!

 
Oklahoma

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து சமைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர்  2021-ல் போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஓக்லஹோமாவின் ஆளுநர் கெவின் ஸ்டிட் அவருக்கு  முன்கூட்டியே விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளார். 

அதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டர்சன் 41 வயதான ஆண்ட்ரியா லின் பிளாங்கன்ஷிப்பின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவரது இதயத்தை மட்டும் தனியாக வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு அவரது அத்தை மாமாவான லியோன் பை மற்றும் டெல்சி பை ஆகியோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

OKlahoma

பின்னர் அந்த பெண்ணின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது மாமா, அத்தை மற்றும் அவர்களின் பேத்திக்கு பரிமாறியுள்ளார். அதை உண்ண மறுத்ததால் அவரது மாமாவான 67 வயதான லியோன் பை  மற்றும் அவரது 4 வயது பேத்தி கேயோஸ் யேட்ஸ் ஆகியோரைக் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். அவர் சுயநினைவை இழந்ததால், இறந்ததாக எண்ணி ஆண்டர்சன் சென்றுள்ளார்.

இது குறித்து புதன்கிழமை கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் முயற்சி குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். அவரது குற்றங்களுக்கு ஐந்து தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளைப் பெற்றார்.

Lawrence Paul Anderson

பின்னர் விசரணையின் போது கொஞ்ச நாள் முன்னர் அவர் விடுவிக்கப்பட்ட ஆணை தவறானது என்பது தெரிய வந்துள்ளது. தண்டனை குறைப்பு, சிறை மாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தவறுதலாக ஆண்டர்சன் பெயர் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

From around the web