குழந்தை அழுகையை நிறுத்த பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்த தாய்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!!

 
baby

அமெரிக்காவில் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக பாட்டிலில் மதுவை ஊற்றி தாய் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் வசித்து வருபவர் ஹானஸ்டி டீ லா டோரி (37). இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. கைவசம் பால், பால் பவுடர் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்த மதுவை பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார்.

Feed

குழந்தையும் பசி தாங்க முடியாமல் மது நிறைந்த பாட்டிலை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், வழக்கமாக நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தாயாரின் செயல்கள் காவல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் குழந்தையை ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையும் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கடந்த சனிக்கிழமையன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தற்போது குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

women-arrest

இதேபோன்று ஓஹியோ மாகாணத்தில் 16 மாத குழந்தையை பராமரிக்கால் கொலை செய்த குற்றத்திற்காக அவரது தாய் 31 வயதாகும் கிறிஸ்டல் கேண்டலேரியோ கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறையை கழிக்க கிறிஸ்டல் சென்ற நிலையில், குழந்தை பராமரிப்பின்றி பசி தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

From around the web