ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயர்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு

 
Sameer Pandey

ஆஸ்திரேலியாவின் பாராமட்டா நகரத்தின்  மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிக்ப்பெரிய நகரமான சிட்னியில் உள்ள புறநகர் பகுதியான பரமட்டா நகரத்தின் கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சமீர் பாண்டே. அத்துடன், பாரமட்டா நகர துணை மேயராகவும் பணி புரிந்துள்ளார்.

Sameer Pandey

இந்த நிலையில், பரமட்டா நகரின் மேயராக இருந்த டேவிஸ், மாகாண உறுப்பினராக பதவியேற்ற நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சமீர் பாண்டே வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சமீர் பாண்டே, கடந்த 1995-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பணிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

Sameer Pandey

அரசியலிலும் ஆர்வம் கொண்டவராக இருந்த சமீர் பாண்டே, தேர்தலில் போட்டியிட்டு 2017-ம் ஆண்டு பரமட்டா நகரின் வார்டு உறுப்பினராக தேர்வானார். தொடர்ந்து 2022-ம் ஆண்டு துணை மேயராக பதவியேற்ற அவர், தற்போது பரமட்டா நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

From around the web